Tuesday, January 08, 2013
இலங்கை::தமிழ்மொழி மூலமான பாடசாலைகளிலும் கல்வி அலுவலகங்களிலும் தற்சமயம் நிலவும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு உரியவர்களை உள்வாங்கும் முகமாக விசேட பரீட்சையினை நடாத்தி ஆட்சேர்ப்பினை மேற்கொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்திவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு, கல்வியியலாளர்களினால் மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்தே அமைச்சரவர்கள் இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
ஏற்கனவே இலங்கை நிர்வாக சேவையில் ஏற்பட்ட வெற்றிடங்களை அடுத்து 1990இல் இவ்வாறான 104 நியமனங்கள் வழங்கப்பட்டதுடன் கடந்த 2003ம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் 82 பேருக்கும் 2012ம் ஆண்டு வடமாகாணத்தில் 43 பேருக்கும் விசேட போட்டிப்பரீட்சைகள் நடாத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று தற்சமயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்; மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை அடுத்து கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு நிலவும் பற்றாக்குறை தீர்த்துவைக்கப்பட்டு கல்வித்துறை மேம்பாடடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment