Tuesday, January 8, 2013

விஜயகாந்த் மீதான சம்மனுக்கு தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு!

Tuesday, January 08, 2013
சென்னை::தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது திண்டுக்கல், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 3 மாவட்ட செஷன்ஸ் கோர்ட்களில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு 3 கோர்ட்களும் விஜயகாந்த்துக்கு சம்மன் அனுப்பின. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் விஜயகாந்த் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி பால்வசந்தகுமார் விசாரித்து, கடலூர் கோர்ட் சம்மனுக்கு மட்டும் தடை விதித்தார். மற்ற இரண்டு கோர்ட்களின் சம்மனுக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். இது தொடர்பாக தமிழக அரசு 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கில் தமிழக அரசு சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த பாண்டியனும், விஜயகாந்த் சார்பாக வக்கீல் பாலாஜியும் ஆஜரானார்கள்.

No comments:

Post a Comment