Tuesday, January 08, 2013
பெங்களூர்::ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூர் தனிநீதிமன்றத்தில் இளவரசி நேற்று ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தார். அவரிடம் 211 கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்காவது நபரான இளவரசி நேற்று தனிநீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் அளித்த வாக்குமூலம் விவரம்:
நீதிபதி: ஏ.எஸ். டெவலப்பருக்கு சசிகலா சொத்து வாங்கியது தெரியுமா?
இளவரசி: தெரியாது.
நீதிபதி: 1994ல் சசிகலா பெயரில் தி.நகரில் நிலம் வாங்கியது, 1994ம் ஆண்டு கிரீன் பார்ம் ஹவுஸ் பெயரில் நிலம் வாங்கியது, ஜே.ஜே. ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு நிலம் வாங்கி பத்திர பதிவு செய்தது பற்றி தெரியுமா?
இளவரசி: தெரியும், நிறுவனத்துக்கு வாங்கியது உண்மையாக இருக்கலாம்.
(தொடர்ந்து சொத்துக்கள் வாங்கியது தொடர்பான நூறுக்கும் மேற்பட்ட கேள்விகளை நீதிபதி கேட்டார்.
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிகவும் குறைந்த விலைக்கு நிலங்கள் வாங்கி பத்திரப்பதிவு செய்ததால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பது பற்றி தெரியுமா என்று நீதிபதி கேட்டார். இதற்கு இளவரசி, சில சொத்துக்களைபற்றி தெரியாது என்றும், சில நிறுவனத்துக்காக வாங்கப்பட்டது என்றும், நிலங் களை நிறுவனத்தின்
பெய ரில் வாங்கியிருக்கலாம் என்றும் பதில் அளித்தார்.)
நீதிபதி: சொத்துக்குவிப்பு தொடர்பாக அரசு அதிகாரி வாசுதேவன் என்பவர் ஜெயலலிதா வீட்டில் ஆய்வு மேற்கொண்டபோது, ரூ.3,35,55,043 மதிப்பு தங்கநகைகள் இருந்தது கண்டுபிடித்தது பற்றி தெரியுமா?
இளவரசி: தெரியாது.
நீதிபதி: ஜெயலலிதா வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், வைரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட கடிகாரங்களின் மதிப்பு
ரூ.47,61,860 என்று மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது பற்றி தெரியுமா?
இளவரசி: தெரியாது.
நீதிபதி: ஜெயலலிதா வீட்டில் 1,116 கிலோ எடைகொண்ட வெள்ளிப்பொருட்கள் இருந்துள்ளது பற்றி தெரியுமா?
இளவரசி: தெரியாது.
நீதிபதி: ஜெயலலிதா வீட்டில் ரூ.2,90,100 மதிப்பிலான 106 ஜோடி செருப்புகள் இருந்தது பற்றி தெரியுமா?
இளவரசி: அந்த செருப்புகளில் என்னுடைய செருப்புகள்தான் அதிகமாக இருந்தது.
நீதிபதி: ஜெயலலிதா வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சேலைகள் பற்றி தெரியுமா?
இளவரசி: அதிகாரிகள் கண்டுபிடித்த சேலைகளில் என்னுடைய சேலைகள் தான் அதிகமாக இருந்தது.
நீதிபதி: சசிகலா பெயரில் இயங்கிவந்த நிறுவனங்களுக்கு சுதாகரன், இளவரசி ஆகியோர் பெயரில் பல்வேறு இடங்களில் சொத்துகள் வாங்கியது பற்றி தெரியுமா?
இளவரசி: சில நிலங்கள் நான் இணை இயக்குனராக இருந்தபோது வாங்கப்பட்டவை, சில நிலங் கள், இணை இயக்குனர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தபின் வாங்கியதால் அதுபற்றி எனக்கு தெரியாது என்று தொடர் ந்து பதில் அளித்தார்.
மாலை 4.45 மணிவரை இளவரசியிடம் நீதிபதி 211 கேள்விகளை கேட்டு வாக்குமூலத்தை பதிவுசெய்தார்.
அவரிடம் வாக்குமூலம் பெறும் பணி இன்றும் தொடர்கிறது.

No comments:
Post a Comment