Saturday, January 12, 2013
இலங்கை::பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில், ஜனாதிபதியே இறுதி தீர்மானத்தை மேற்கொள்வார் என்று சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.
எமது செய்திப்பிரிவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் குறித்த குற்றவியல் பிரேரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை ஜனாதிபதி கைச்சாத்திட்டு, மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இந்த அறிக்கையில் ஜனாபதி இன்னும் கைச்சாத்திடவில்லை என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் 18ம் திகதி புதிய நீதியரசர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment