Saturday, January 12, 2013

இந்திய ராணுவ வீரர்கள் கொடூர கொலை: பாகிஸ்தானை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்- பொன்.ராதாகிருஷ்ணன்!

Saturday, January 12, 2013
சென்னை::சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தினத்தையொட்டி தியாகராய நகர் பர்கீட் சாலையில் உள்ள அவரது உருவசிலைக்கு பா.ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் இல.கணேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அடிமைப்பட்ட அவமா னப்படுத்தப்பட்ட இந்து தர்மத்தை சிகாகோவில் ஆற்றிய வீர உரையின் மூலம் தலை நிமிர வைத்தவர் சுவாமி விவேகானந்தர். இந்தியாவின் பெருமையை உலக நாடுகள் உணர வைத்தார். அவரது வழியை பின்பற்றி நாட்டையும், கலாச்சாரத்தையும் பேணி காப்பது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான நன்றிக்கடன். அவரது கருத்துகளையும், தெளிந்த சிந்தனைகளையும், தத்துவங்களையும் கல்வி திட்டங்களில் சேர்த்து இளைய தலைமுறையை வழி நடத்தினாலே நாட்டில் 60 சதவீத குற்றங்கள் தடுக்கப்படும்.

கன்னியாகுமரியில் கடல் நடுவில் விவேகானந்தர் பாறையும், சிலையும் விவே கானந்தா கேந்திராவால் சிறப்பாக பராமரிக்கப் படுகிறது. அதன் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை யும் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும். இந்திய ராணுவ வீரர்களின் தலையை கொடூரமாக துண்டித்த பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. அறிவிக்கப்படாத யுத்தத்தை பாகிஸ்தான் இந்தியா மீது தொடுத்துள்ளது. தீவிரவாதிகளின் கூடாரமாகவே பாகிஸ்தான் ராணுவம் மாறியிருப்பது வெளிச்சத்துக்கு வந்து விட்டது. 4 முறை இந்தியாவிடம் தோற்றும் பாகிஸ்தான் பாடம் கற்கவில்லை.

இந்தியா இனி எடுக்கும் நடவடிக்கை பாகிஸ்தானுடன் நடக்கும் கடைசியுத்தமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு நாடே இருந்த அடையாளம் இல்லாமல் ஆக்க வேண்டும். பாகிஸ்தானின் நடவடிக்கையை கண்டித்து நாளை (13-ந்தேதி) மற்றும் 16-ந்தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 16-ந்தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் மோகன் ராஜூனு, செயலாளர் வானதி சீனிவாசன், டால்பின் ஸ்ரீதர், பாணிக்ரஹா ஸ்ரீதர் மாவட்ட தலைவர்கள் பிரகாஷ், ரவிச்சந்திரன், மகளிர் அணி தலைவி சரளா, கணேஷ், வெங்கட் ராமன், செம்மலர் சேகர், தனசேகர், காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment