Saturday, January 12, 2013

புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் கொள்கைக்கு அமைய சிரானி செயற்படுகிறார் - விமல் வீரவன்ச!

Saturday, January 12, 2013
இலங்கை::பிரதம நீதியரசருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் இருக்கும் போது, பதவி விலகாவிட்டால் நாட்டை சீர்குலைக்கும் முயற்சியில் அவர் இருக்கிறார் என்பது தெளிவாகிறதென அமைச்சர் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசர் தமது வழக்கை தம்மால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளால் தமக்கேற்ற தீர்ப்பை பெற்றுள்ளார். அவரது பதவியை பயன்படுத்தி பாராளுமன்றத்தின் செயற்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்.

பாராளுமன்ற நிலையியல் கட்டளை தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டாலும் எவரும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பற்றி கருத்து தெரிவிக்கவில்லை.

புலம்பெயர்  புலிகளின் ஆதரவாளர்களின் கொள்கைக்கு அமைய அரசாங்கத்துக்கும், நீதிமன்றத்துக்கும் மோதலை ஏற்படுத்தி, அதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக்காட்ட அவர் முயன்றுள்ளமை தெளிவாவதாக வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குற்றப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு விவதாத்தின் போது வீரவன்ச இந்த கருத்து வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment