Saturday, January 12, 2013

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகத்தில் இருந்து இன்று வெடிமருந்து மீட்பு!

Saturday, January 12, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகத்தில் இருந்து இன்று வெடிமருந்து மீட்பு!

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக்  (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகத்தில் இருந்து இன்று வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறீதரனின் அலுவலகத்தில் இருந்து 4 சீ வெடிமருந்துகள், ஆபாச இறுவட்டுகள், ஆணுறைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்,

சீ - 4 ரக வெடிமருந்தே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழ்த் தேசியக்  (புலி)கூட்டமைப்பின் கிளிநொச்சி அமைப்பாளர் வேழமாலிதன்,  (புலி)கூட்டமைப்பின் ஆதரவாளரான வசந்தன் என்பவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களோடு பா.உறுப்பினர் சிறிதரனின் அலுவலகத்தில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது. இந் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் கொழும்பில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள சிறிதரனின் அலுவலகத்திற்கு இன்று மாலை 3:00 மணியளவில் வந்த பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் அலுவலகத்தை சோதனையிட்டு, பையொன்றினுள் வெடிமருந்து இருந்ததாக எடுக்கப்பட்டு அமைப்பாளர் வேழமாலிதனையும், ஆதரவாளரான வசந்தனையும் கைதுசெய்துள்ளனர்....

 ஈழப் போராட்டத்தை ஆதரத்து தனிநாட்டுக் கோரிக்கைக்கு வலுச் சேர்த்து இந்தியாவில் சிறீதரன் பேசினார் என முதலில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரித்னர்
பின்னர் அண்மையில் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்கள் குறித்து ஊடகங்களுக்கு செவ்வி வழங்கினார் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரித்னர்,


 குறிப்பாக அண்மையில் ஒரு செய்தியை பிரசுரித்திருந்தன. கிளிநொச்சியில் 15 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்களை வெளியிட்டு இருந்தன.

No comments:

Post a Comment