Saturday, January 12, 2013

இந்தியாவின் முகாம்களில் வசித்துவரும் இலங்கை அகதிகளில் 1200ற்கும் மேற்பட்டோர் 2012ம் ஆண்டு இலங்கை திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது!

Saturday, January 12, 2013
சென்னை::இந்தியாவின் முகாம்களில் வசித்துவரும் இலங்கை அகதிகளில் 1200ற்கும் மேற்பட்டோர் 2012ம் ஆண்டு இலங்கை திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாம்களில் வசித்து வந்த சுமார் 1260 பேர் கடந்த வருடம் ஜனவரி தொடக்கம் டிசம்பர் வரை இலங்கை திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டு 1670 அகதிகளும் 2009ம் ஆண்டு 2040 அகதிகளும் இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பியுள்ளனர்.

இவர்கள் இலங்கை திரும்புவதற்கான போக்குவரத்து செலவு, கொழும்பில் இருந்து சொந்த இடங்களுக்குச் செல்ல போக்குவரத்து கொடுப்பனவு என்பவற்றை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானிகரகம் வழங்கியுள்ளது.

60,000ற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் இந்திய அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள மொத்த அகதிகள் எண்ணிக்கையில் இது 36 சதவீதமாகும்.

No comments:

Post a Comment