Tuesday, January 15, 2013
இலங்கை::ப்ரகமுவ மாகாணசபை அமைச்சர் ஸ்ரீலால் விக்ரமசிங்கவின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் சார்ஜனுக்கு வழங்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி நேற்றைய தினம் காணாமற்போனதாக கேகாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்தே பொலிஸ் சார்ஜன் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் கேகாலை பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment