Tuesday, January 15, 2013
இலங்கை::புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு நிலைமையையும் எதிர்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி குறிப்பிட்டார்.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வருகைதரும் பொதுமக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் இன்றி, தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இதேவேளை, புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதியை அண்மித்த சில வீதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, நீதிமன்றத்திற்குள் செல்லும் அனைவரும் சேதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

No comments:
Post a Comment