Tuesday, January 8, 2013

நாட்டின் அதியுயர் நிறுவனமான நாடாளுமன்றத்திற்கு மக்கள் தமது வாக்குகளின் மூலம் வன்முறையாளர்களை அனுப்பியிருந்தால், அதற்கு நாட்டில் உள்ள வாக்காளர்களே பொறுப்புக் கூறவேண்டும் - ராஜித சேனாரத்ன!

Tuesday, January 08, 2013
இலங்கை::நாட்டின் அதியுயர் நிறுவனமான நாடாளுமன்றத்திற்கு மக்கள் தமது வாக்குகளின் மூலம் வன்முறையாளர்களை அனுப்பியிருந்தால், அதற்கு நாட்டில் உள்ள வாக்காளர்களே பொறுப்புக் கூறவேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால், இதனை புரிந்து கொண்டு, எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் தவறிழைக்கா, ஒழுக்கமான, நற்குணங்களை கொண்டவர்களுக்கு மக்கள் வாக்குகளை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். பேருவளை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

50 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட இனவாதம், 80 ஆண்டுகளில் பின்னர், 30 வருட யுத்தமாக உருவெடுத்தது. இதில்  சிங்கள, தமிழ், முஸ்லிம் என லட்சக்கணக்கான பிள்ளைகள் கொல்லப்பட்டனர். அவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் இலங்கையர்கள். எனினும் பிள்ளைகளின் கைகளில் ஆயுதங்களை கொடுத்தவர்கள் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளே. இப்படியான அரசியல்வாதிகளுக்கு நாட்டு மக்களே அதிகாரத்தை வழங்குகின்றனர் எனவும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment