Tuesday, January 08, 2013
இலங்கை::உச்ச நீதிமன்றத்தினால் அரசியலமைப்பை நிராகரிக்க முடியாது. உச்சநீதிமன்ற வியாக்கியானத்தின்போது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவை வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டிருந்தால் அது பாரதூரமான தவறாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற வியாக்கியானத்தில் தெரிவுக் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்க முடியாது என எங்கும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறிய அவர்கள், நீதிமன்ற கட்டமைப்பை புதை குழியில் தள்ளாது இறுதி நேரத்திலாவது பிரதம நீதியரசர் ஒதுங்கிக்கொள்வார் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு அமைச்சர்களான ட்பிள்யூ. டி. ஜே. செனவிரத்ன, டளஸ் அழகப் பெரும, மைத்திரிபால சிரிசேன ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜோன் செனவிரத்ன, உச்சநீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களை விலக்குவதற்கு குற்றப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டு ள்ளது.
அரசியலமைப்பின் 107 (3) சரத்தின்படி பாராளுமன்ற சட்டத்தினூடாகவோ நிலையியற் கட்டளையின் படியோ நீதியரசர் ஒருவரை நீக்க நடவடிக்கை எடுக்க முடியும். இதற்கு முன்னர் நிலையியற் கட்டளைபடியே பிரதம நீதியரசர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதன் படியே இம்முறையும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நாட்டில் அரசியலமைப்பே உயர்வானது. அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளதற்கமை யவே நிலையியற் கட்டளைபடி குற்றப் பிரேரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே எவ்வாறு இதனை உச்சநீதிமன்ற த்தினால் நிராகரிக்க முடியும்.
நீதிமன்றத்தினால் சட்டம் அமைக்க முடியாது. வியாக்கியானம் வழங்கவே முடியும். பாராளுமன்றமே சட்டங்களை அமைக்கிறது.
சில சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்திற் கும் நீதிமன்ற அதிகாரம் உள்ளது. எம்.பி. களின் சிறப்புரிமைகள் மீறப்படும்போது பாராளுமன்றத்திற்கு நீதிமன்ற அதிகாரம் இருக்கிறது. முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குறிப்பிட்டது போன்று நீதிமன்றம் வேண்டுமென்றே அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளதை ஒதுக்கி தீர்ப்பு வழங்கியிருந்தால் அது பாரதூரமான தவறாகும்.
இங்கு அமைச்சர் டளஸ் அழஹப் பெரும கூறுகையில், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு எதிராக குற்றப் பிரேரணை முன்வைக்கப்பட்ட§ பாது இதேபோன்று வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர் குழுவில் இன்றைய பிரதம நீதியரசரும் இருந்தார்.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டவாறு பாராளுமன்ற சட்டத்தின் மூலமோ நிலையியற் கட்டளையின் மூலமோ மட்டுமே பிரதம நீதியரசரை அகற்ற முடியும் என நீதியரசர் குழு 2001ல் தீர்ப்பளித்தது. இதற்கு வேறு மாற்று வழி கிடையாது என அன்று கூறப்பட்டது.
இந்த சட்டத்தின்படி இதுவரை 3 பிரதம நீதியரசர்கள், 2 நீதியரசர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நிலையியற் கட்டளை சட்டமல்ல என்று இன்று கூறுபவர்கள் 1984ல் அது அமைக்கப்பட்டது முதல் இன்று வரை எதுவும் அது குறித்து பேசவில்லை. கடந்த சில வாரங்களாகவே சட்டத்தை மாற்றுவது குறித்து பேசுகின்றனர்.
நீதிமன்ற கட்டமைப்பை புதைகுழியில் தள்ளாது இறுதி நேரத்திலாவது நிலைமையை உணர்ந்து பிரதம நீதியரசர் ஒதுங்கிச் செல்வார் என கருதுகிறோம். பாராளுமன்றமே உயர்வானது என்ற நிலைப்பாட்டில் இருந்த ஐ.தே.க. இன்று தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கலாம். ஏனென்றால் பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வருவதாக ஐ.தே.க தான் முதலில் கூறியிருந்தது என்றார்.
அமைச்சர் மைத்திரிபால சிரிசேன கூறியதாவது, தற்பொழுதுள்ள பிரச்சினையை பயன்படுத்தி அரசாங்கத்தை பலவீனப்படுத்த சிலர் முயல்கின்றனர். பாராளுமன்றத்தின் உரிமையையும் அதிகாரத்தையும் குறைக்கும் வகையில் ஜே.வி.பியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அறிக்கைவிட்டு வருகின்றன.
அரசியலமைப்பு குறித்து வியாக்கியானம் கூறும் உரிமை உச்ச நீதிமன்றத்திற்கே உள்ளது. ஆனால் நீதிமன்றமும் இந்தப் பிரச்சினையில் மற்றொரு தரப்பாக இருக்கையில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை எந்தளவிற்கு ஏற்க முடியும்.
வேறு நாடுகளில் நீதிமன்றம் ஒரு தரப்பாக இருக்கையில் நீதிமன்றம் ஒதுங்கிக்கொண்டு பாராளுமன்றத்திற்கு அவகாசம் வழங்கப்படுகிறது என அமைச்சர் மைத்திரிபால சிரிசேன மேலும் கூறினார்.

No comments:
Post a Comment