Sunday, January 27, 2013

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஒன்றிணைந்து இருப்பதற்கான தேவை உள்ளது - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அஷோக் கே காந்தா!

Sunday, January 27, 2013
இலங்கை::இந்தியாவின் 64ஆவது குடியரசுத் தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று விசேட நிகழ்வொன்று நடைபெற்றது.

இலங்கைக்கான உயர்ஸ்தானிகரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்.கே.காந்தா கலந்துகொண்டார்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஒன்றிணைந்து இருப்பதற்கான தேவைப்பாடு உள்ளதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அஷோக் கே காந்தா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியவின் 64வது குடியரசு தின நிகழ்வுகள் நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குற்பிட்டார்.

இருநாட்டுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்பட்டு வருவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவும் இலங்கையும் பொது வராலாற்றுக்கு உரிமை கொண்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment