Sunday, January 27, 2013

கைக்குண்டுகளுடன் பயணித்தவர்களுக்கு 8 வரை விளக்கமறியல்!

Sunday, January 27, 2013
இலங்கை::ஹபராதுவ - மெலாகொடை பகுதியில் வைத்து வெளிநாட்டில தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அக்குரஸ்ஸ மற்றும் அஹங்கம பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் 18 குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேநபர்கள் எதிர்வரும் 8ஆம் திகி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.




No comments:

Post a Comment