Thursday, January 10, 2013

புலி ஆதரவாளர்களே நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர் - அமைச்சர் மஹந்தானந்த அலுத்கமகே!

புலி ஆதரவாளர்களே பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஷிரானி பண்டாரநாயக்க சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி நிறுவனமான நீலகாந்தன் என்ட் நீலகாந்தன் நிறுவனம் புலிச் சந்தேக நபர்களுக்காக நீதிமன்றில் ஆஜராகும் ஓர் சட்டத்தரணிகள் நிறுவனம் என அமைச்சர் மஹந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளை பாராளுமன்றில் பாதுகாக்க முயற்சிக்கும் ஓர் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன், பிரதம நீதியரசருக்காக குரல் கொடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். ஜே.சீ வெலியமுன, பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா பெர்னாண்டோ போன்றோர் வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு இவ்வாறு பிரதம நீதியரசருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

புலி ஆதரவு டோசோ மாநாட்டில் கலந்து கொண்ட விக்ரபாகு கருணாரட்னவும் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். புலி ஆதரபு தரப்பினர் நீதிமன்றிற்கும் பாராளுமன்றிற்கும் இடையில் பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment