Thursday, January 10, 2013

இலங்கை பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள குற்றப்பிரேரணை மற்றும் அது தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா கூடிய கவனம் - விக்டோரியா நுலண்ட்!

Thursday, January 10, 2013
இலங்கை::இலங்கையின் முதலாவது பெண் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க குறித்த இலங்கை அரசின் குற்றப்பிரேரணை நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அமெரிக்கா தமது தீவிர கவலையை வெளியிட்டுள்ளது.

எனினும் ரிசானா நபீக் குறித்து தகவல் வெளியிட ஐக்கிய அமெரிக்கா மறுத்துள்ளது. ரிசானா குறித்து தாம் அறிந்திருக்கவில்லை எனவும் அதுபற்றி ஆராய்ந்து கருத்து வெளியிடப்படும் எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குற்றப்பிரேரணை குறித்து தீவிர கவலையடைவதாக இதற்கு முன்னரும் தாம் கூறியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நூலான் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீதித்துறை மீதான நடவடிக்கை மற்றும் அரசாங்கத்தின் அழுத்தம் என்பன தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment