Sunday, January 06, 2013
இலங்கை::தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இரட்டை குடியுரிமை வழங்களை மீண்டும் அமுலாக்க குடிவரவு கட்டுப்பாட்டுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த முறைமையை நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் அமுலாக்கும் பொருட்டு, தற்காலிகமாக இது கைவிடப்பட்டிருந்ததாக வெளியுறவுகள் துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது விண்ணபதாரிக்கும், நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இரட்டை குடியுரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளன.
குறிப்பாக வெளியுறவுகள் துறை அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றினால் உறுதி செய்யப்படுகின்றவர்களுக்கு விரைவாக இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment