Saturday, January 12, 2013
இலங்கை::சோமாலியக் கடற்கொள்ளையர்கள் பணயக் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கப்பல் பணியாளர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சோமாலிய கடற்கொள்ளையர்களால் 2010ஆம் ஆண்டில் பணயமாக பிடிக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கை கப்பல் பணியாளரே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.
விடுதலை பெற்று, கென்யாவின் நைரோபியில் தங்கியிருக்கும் கப்பல் பணியாளர், எதிர்வரும் சில தினங்களில் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
19 கப்பல் பணியாளர்களுடன் எம்.வி. ஒர்னா என்ற கப்பல், தென் ஆபிரிக்காவில் இருந்து இந்தியா நோக்கிப் பயணித்தபோது, 2010ஆம் ஆண்டின் டிசம்பர் மாதமளவில் இந்த கப்பல் பணியாளர் சோமாலிய கடற்கொள்ளையர்களால் பணயக் கைதியாக தடுத்துவைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment