Saturday, January 12, 2013

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில், மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது!

Saturday, January 12, 2013
இலங்கை::பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில், மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நீதித்துறைக்கும், அரசியல் துறைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவு நிலை மிகுந்த அவதானத்துக்கு உட்படுத்த வேண்டியது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, குற்றவியல் பிரேரணைகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களின் போது, கொழும்பில் உள்ள தமது தூதரகத்துக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும், அமெரிக்கா கோரியுள்ளது.

No comments:

Post a Comment