Saturday, January 12, 2013

.இலங்கை இளைஞருக்கு கட்டாரில் மரண தண்டனை!

Saturday, January 12, 2013
இலங்கை::இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு

ரில் உள்ள நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.

வெங்கடாசலம் சுதேஷ்கர் என்ற 22 வயதான இளைஞருக்கே கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டாரில் பணிபுரிந்த இந்திய இளைஞர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக குறித்த இளைஞர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

கந்தானை பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞர், 2010ஆம் ஆண்டின் மார்ச் மாதம் தொழில்வாய்ப்புப் பெற்று கட்டார் சென்றிருந்தார்.

கொலை சம்பவம் தொடர்பில் 2011ஆம் ஆண்டின் ஜூன் மாதமளவில் அந்த இளைஞர் கட்டார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், தமது மகனை விடுதலை செய்வதற்காக கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெற்றோர் 35 இலட்சம் ரூபாவை இழப்பீடாகக் கோரியுள்ளனர் என மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இளைஞரின் தாய் தெரிவித்தார்.

எனினும், அந்தத் தொகையை செலுத்துவதற்கான இயலுமை தம்மிடமில்லை என்றும் இளைஞரின் தாயார் குறிப்பிட்டார்.

இந்த இளைஞர் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து கட்டாருக்கான இலங்கைத் தூதரகத்திடம் வினவியது.

இது தொடர்பிலான சகல விடயங்களும் வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக கட்டாருக்கான இலங்கைத் தூதரகத்தின் சிரேஷ்ட பெண் அதிகாரி ஒருவர் கூறினார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இளைஞன் வெங்கடாசலம் சுதேஷ்கரை விடுவிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ள

இதேவேளை, சவுதி அரேபியாவில் குழந்தையொன்றை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு கடந்த 9ஆம் திகதி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment