Saturday, January 12, 2013
இலங்கை::நாட்டின் உள்விவகாரங்களில் சில வெளிநாட்டு சக்திகள் தேவையின்றின் தலையீடு செய்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுதனை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனையை முன்வைத்ததாக இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நிதானமான தீர்மானங்களை எடுக்காவிட்டால் யுத்தத்தின் பின்னரான இலங்கையின் மீளமைப்பு பணிகளில் பாதக நிலைமை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விமர்சனம் செய்து வந்த எதிர்க்கட்சிகள், அரசாங்கத்துடன் முரண்பாடு ஏற்பட்டதனைத் தொடர்ந்து சரத் பொன்சேகாவை போற்றி பாராட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், சரத் பொன்சேகாவை தங்களது குறுகிய நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது என அறிந்து கொண்டதன் பின்னர், அவரை தூக்கி எறிந்து விட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு நேர்ந்த கதியே, தற்போதைய பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கும் நேரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment