Tuesday, January 08, 2013
புதுவை::மும்பையில் இருந்து புதுச்சேரி வந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று காலை 7.50க்கு மும்பை தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் புதுச்சேரி வந்தடைந்தது. பின்னர் காலை 8.30க்கு ரயிலை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பெட்டியில் கவனிப்பாரற்றுக் கிடந்த ஒரு பெட்டியைப் பார்த்த சீனியர் பாசஞ்சர் கார்ட் துரை என்பவர், அதனைத் திறந்து பார்த்துள்ளார். அதில், வெடிகுண்டு பொருள்கள் இருந்தது தெரியவந்தது. உடனே மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். பெட்டியை முழுவதும் திறந்து பார்த்ததில், சணல் சுற்றப்பட்ட பந்து போன்று இருந்துள்ளது. அது வெடிகுண்டா என்று சந்தேகப் பட்ட அதிகாரிகள், மேலும் சோதித்ததில், வயர்கள், இண்டிகேட்டர் இருந்துள்ளது. அதில் இருந்து ஒரு வயர் செல்போன் ஒன்றுடன் இணைக்கப்பட்டு, டேப் போட்டு சுற்றப்பட்டிருந்தது. சூட்கேசில் வேறு பொருள் இல்லை. அந்தப் பந்து, கிரிக்கெட் பந்தை விட சற்று பெரிய அளவில் சிகப்பு வண்ணத்தில் இருந்துள்ளது. அது, மெட்டல் டிடக்டரில் வெடிகுண்டு என்று தெரியவந்தது.
அந்தப் பந்து போன்ற பொருளில், மாயன் காலண்டர் - மாயன் தங்கம் என்று எழுதப்பட்டிருந்தது. எனவே, மாயன் காலண்டர் குறித்து மனநிலை பாதிக்கப்பட்ட மர்ம நபர்களின் செயலாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
வெடிக்கும் வாய்ப்பு இருந்தால் பெரிய சேதத்தையும் ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் அந்தப் பொருள் பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டது. நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது வெடிபொருள்தான் என்று அவர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மும்பையில் இருந்து புதுவை வரை இது ரயிலில் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வளவு பாதுகாப்பு சோதனைகளையும் மீறி, வெடிபொருள் சோதனைக் கருவியிலும் சிக்காமல், புதுவை வரை வந்துள்ளது ரயில்வேத் துறையில் உள்ள பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

No comments:
Post a Comment