Tuesday, January 8, 2013

பலி எண்ணிக்கை 200ஆக உயர்வு! வடமாநிலங்களில் கடும் குளிருக்கு நேற்று ஒரே நாளில் 29 பேர் பலி!

Tuesday, January 08, 2013
புதுடெல்லி::வடமாநிலங்களில் கடும் குளிருக்கு நேற்று ஒரே நாளில் 29 பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து இந்த சீசனில் மட்டும் கடும் குளிருக்கு பலியானோர் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. வடமாநிலங்களில் கடந்த இரண்டு வாரமாக கடும் குளிர் நிலவி வருகிறது. டெல்லியில் கடந்த வாரம்  44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிர்வாட்டியது. பனிமூட்டம் காரணமாக விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டம் காரணமாக 40க்கும் மேற்பட்ட ரயில்களை வடக்கு ரயில்வே 2 வாரத்துக்கு ரத்து செய்துள்ளது. டெல்லி செல்லும் சில ரயில்கள் 48 மணி நேரம் தாமதமாக செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. வடமாநிலங்களில் கடும் குளிருக்கு அதிகம் பாதிக்கப்பட்டி ருக்கும் உ.பி.யில் மட்டும் 175 பேர் குளிருக்கு பலியாகியுள்ளனர்.

உ.பி.மாநிலத்தை சேர்ந்த காசிபூரில் 6 பேரும், அம்சகர் மற்றும் பாராபங்கியில் தலா 3 பேரும், பதேபுர், சுல்தான்புர், சந்தவ்லியில் தலா இரண்டு பேரும், ஜான்பூர் மற்றும் சித்தார்த் நகரில் தலா ஒருவரும் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாபில் இதுவரை 13 பேரும், அரியானாவில் இதுவரை 8 பேரும் கடும் குளிருக்கு பலியாகியுள்ளனர். உத்தரகண்ட், இமாச்சல் ஆகிய மாநிலங்களில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

No comments:

Post a Comment