Thursday, January 10, 2013
இலங்கை::நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தொடர்பில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது அறிக்கை தொடர்பில் ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் போது எவரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் இதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று அர்த்தப்படுவதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் தெரிவித்தார்.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணை மீதான விவாதம் இன்று இன்று இடம்பெறுகின்ற நிலையில், எதிர்க்கட்சியினருக்கு கிடைக்காத அறிக்கையொன்றைப் பற்றி நாடாளுமன்றத்தில் எவ்வாறு விவாதிப்பது என்று சபையில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தெரிவுக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய தங்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வேண்டும் என்றும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனால், சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்த சபாநாயகர், எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்கு பின்னர் பதிலளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், சற்றுநேரத்துக்கு முன்னர் சபை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்போது கருத்து வெளியிட்ட சபாநாயகர், குற்றப் பிரேரணை தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் எவ்விதத் தடைகளுமின்றி தொடர்ந்து இடம்பெறும் என்று அறிவித்தார்

No comments:
Post a Comment