Thursday, January 10, 2013

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 40 பேர் தலையை துண்டியுங்கள்: சிவசேனா ஆவேசம்!

Thursday, January 10, 2013
மும்பை::சிவசேனா கட்சி செய்தித் தொடர்பாளர் சஞ்சய்ராத் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

இந்திய மண்ணில் புகுந்து நமது ராணுவ வீரர்கள் 2 பேர் தலையை வெட்டி தனியாக துண்டித்துள்ளனர். அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் 40 பேரின் தலையை நாம் துண்டிக்க வேண்டும். இல்லையெனில் நமது ராணுவ வீரர்கள் சோர்ந்து விடுவார்கள். பிறகு நாட்டுக்காக அவர்கள் போரிடமாட்டார்கள்.

ராணுவ வீரர்களின் தலையை துண்டித்து பாகிஸ்தான் நமக்கு சவால் விட்டுள்ளனர். இதற்கு தார்மீக பொறுப்பு ஏற்று நமது ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பாகிஸ்தானியர்கள் நம்மை எல்லா வகைகளிலும் ஏமாற்றுகிறார்கள். ஒரு பக்கம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு மற்றொரு பக்கம் தாக்குதல் நடத்துகிறார்கள்.

நாட்டுக்காக உயிரைவிட்ட நமது ராணுவ வீரர்களின் தியாகம் வீணாக போய்விடக் கூடாது. இனி பாகிஸ்தானுடன் எந்த விதத்திலும் எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது. ஆனால் மத்தியில் உள்ள திறமையற்ற, ரோஷம் இல்லாத ஊமை அரசு இதையெல்லாம் செய்யாது இந்த நிலையில் நமக்கு ராணுவ அமைச்சர் தேவையா?.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment