Thursday, January 10, 2013
சவோ பாவ்லோ::பிரேசிலில் 2014 உலக கால்பந்து போட்டியின் போது, வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பாலியல் தொழிலாளிகள் இப்போதே தயாராகி வருகின்றனர். வாடிக்கையாளர்களுடன் சரளமாக பேசுவதற்காக பல மொழிகளை கற்று வருகின்றனர். உலக கால்பந்து போட்டி மிகவும் பிரபலமானது. கடந்த 1950ம் ஆண்டு பிரேசில் இந்த போட்டியை நடத்தியது. அதன்பின், வரும் 2014ம் ஆண்டு 2வது முறையாக இப்போட்டியை நடத்துகிறது. இந்த போட்டி 2014 ஜூன் 12ம் தேதி தொடங்கி, ஜூலை 13ம் தேதி முடிகிறது. இந்த போட்டியை காண உலகின் பல நாடுகளை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் பிரேசிலுக்கு வருவார்கள். அப்போது, பாலியல் தொழிலும் பரபரப்பாக நடக்கும்.
இந்நிலையில், வாடிக்கையாளர்களை கவர பிரேசிலின் பெலோ ஹாரிசோன்டி நகர பாலியல் தொழிலாளிகள் பல மொழிகளை இப்போதே கற்க தொடங்கி உள்ளனர். இதுகுறித்து பாலியல் தொழிலாளிகள் சங்க தலைவர் சிடா வியிரா கூறுகையில், Ôபிரேசிலில் நடக்கும் கால்பந்தாட்ட போட்டியின் போது வாடிக்கையாளர்களுடன் அவர்கள் மொழியில் பாலியல் தொழிலாளிகள் சரளமாக பேச இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுடன் நியாயமான ரேட் நிர்ணயித்து கொள்ளவும், தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் பாலியல் தொழிலாளிகளால் முடியும்Õ என்றார். அதன்படி பாலியல் தொழிலில் ஈடுபடும் இளம்பெண்களுக்கு ஸ்பானிஷ், ஆங்கிலம், போர்ச்சுகீஸ் உள்பட பல மொழிகள் இலவசமாக கற்றுத் தரப்படுகின்றன. இந்த மொழி வகுப்பில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் இப்போதைக்கு சேர்ந்து பல மொழிகளை ஆர்வமாக கற்று வருகின்றனர்.

No comments:
Post a Comment