Sunday, January 13, 2013

பிரதம நீதியரசரை பதவி நீக்க ஜனாதிபதி அனுமதி!

Sunday, January 13, 2013
இலங்கை::பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான குற்றப்பிரேரணை தொடர்பிலான அறிக்கையில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை, பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்வது தொடர்பிலான குறித்த அறிக்கை சற்று நேரத்திற்கு முன்னர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையாக அவரை பதவி நீக்கம் செய்வதற்கான அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment