Sunday, January 13, 2013
இலங்கை::பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ம் திகதி வரையில் தமது பதவியை நீடிக்குமாறு, தமது சட்டத்தரணி ஊடாக ஜனாதிபதியிடம் கோரி இருப்பதாக வெளியான தகவலை, அவரது சட்டத்தரணி நிராகரித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்தின் பின்னர் தாம் சுயாதீனமாக பதவி விலகுவதாக அறிவித்து, இந்த கடிதத்தை அனுப்பி இருப்பதாக, ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும் பிரதம நீதியரசரின் சட்டத்தரணி நீலகண்டன் மற்றும் நீலகண்டன் சட்டத்தரணிகள் ஒன்றியம், இந்த தகவல் பிழையானது என்று சுட்டிக்காட்டியுள்ளது.
பிரதம நீதியரசர் பதவி விலக்கல்!
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை பதவி நீக்குவதற்கான அதிகார ஆவனத்தில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க அவரது பதவியில் இருந்துநீக்கப்படுவது உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நேற்றைய தினம் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ ஏனைய உயர்நீதிமன்ற நீதியரசர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
அத்துடன் இன்றைய தினம் சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment