Sunday, January 13, 2013
இலங்கை::இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் அரசாங்கம் 23 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கத் தீர்மானித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்கும் நோக்கில் இந்த நிவாரணங்கள் வழங்கப்பட்டிருப்பதாக ஜப்பானியத் தூதரகம் அறிவித்துள்ளது.
வெள்ளம் மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தற்காலிகக் கூடாரங்கள், பிளாஸ்டிக் விரிப்புக்கள், பாய்கள் நிவாரணமாக வழங்கப்படவுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் வழிகாட்டலின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும்.
ஜய்கா நிறுவனத்தின் ஊடாக இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவிருப்பதாக ஜப்பானியத் தூதரகம் அறிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை விரைவில் மீண்டும் வழமைக்குத் திரும்புமென்று எதிர்பார்ப்பதாக ஜப்பானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment