Monday, January 14, 2013
சென்னை::முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் அனைத்து ரேஷன் அரிசி கார்டுகளுக்கம் ஒரு கிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, ரூ.100 அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்க உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன்கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இலங்கை அகதிகளுக்கு பொங்கல் பரிசு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. இதையடுத்து பல்வேறு அமைப்புகள் இலங்கை அகதிகளுக்கும் பொங்கல் பரிசை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க உத்தரவிட்டார்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பொங்கல் பரிசும் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாப்பிள்ளையூரணி முகாமில் 57 பேருக்கும், தாப்பாத்திமுகாமில் உள்ள 411 பேருக்கும், குளத்துவாய்பட்டி பிரிவில் 31 பேருக்கும் மொத்தம் 499 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட டிஎஸ்ஓ பஷீர் தலைமை வகித்து துவக்கிவைத்தார். தாசில்தார் வசந்தா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment