Monday, January 14, 2013

தைத்திருநாளை கொண்டாடும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இராணுவ தளபதி ஜகசூரிய ஆகியோர் இன்று திங்கட்கிழமை யாழ்பாணத்திற்கு விஜயம்!

Monday, January 14, 2013
இலங்கை::தைத்திருநாளை கொண்டாடும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இராணுவ தளபதி ஜகசூரிய ஆகியோர் இன்று திங்கட்கிழமை யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

யாழ். ஆனையிறவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் யாழ். மாவட்ட பாதுகாப்பு கட்டளை தளபதி மகிந்த ஹத்துருசிங்க தலைமையில் நடைபெற்ற நிகழ்விலேயே இவர்கள் இருவரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, கிளிநொச்சி சென். திரேசா வித்தியாலய மாணவிகளின் நடன நிகழ்வுகளும், அம்பாறை மாவட்ட இசை கலைஞர்களின் 'முகமூடி தயாரிப்பு' எனும் தொனிப்பொருளிலான நாடகமும் இடம்பெற்றன.

 இதேவேளை, ஆனையிறவு இராணுவ முகாமிற்கு அருகாமையில் தற்போது மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு பொங்கல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.ஈ எரிக் பெரேரா மற்றும் இராணுவ தளபதிகள் என பலர் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment