Monday, January 14, 2013

கியூபாவிற்கான புதிய தூதுவராக சரத் திஸாநாயக்க!

Monday, January 14, 2013
இலங்கை::கியூபாவிற்கான இலங்கையின் புதிய தூதுவராக சரத் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியா, ஜப்பான், சீனா, குவைத் போன்ற நாடுகளில் சிரேஷ்ட இராஜதந்திர அதிகாரியாகவும் சரத் திஸாநாயக்க ஏற்கனவே கடமையாற்றியிருந்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது வெளிவிவகார அமைச்சின் பொது தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகிக்கும் அவர் அடுத்த மாதம் முதலாம் திகதி கியூபாவிற்கான இலங்கையின் புதிய தூதுவராக பதவியேற்கவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் இணைவதற்கு முன்னதாக சரத் திஸாநாயக்க உதவி அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment