Monday, January 14, 2013
புதுடெல்லி::தொடர்ந்து சீண்டினால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி தருவோம்'' என்று இந்திய இராணுவ தளபதி விக்ரம் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார்.
இந்திய வீரர்களின் தலை துண்டிக்கப்பட்டது ஏற்றுக் கொள்ள முடியாத செயல் என்று கூறிய விக்ரம் சிங், பாகிஸ்தானுக்கு பதிலடி தர இந்தியாவுக்கு தார்மீக உரிமை உள்ளது என்றார்.
இரண்டு இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றது ஒப்பந்தத்தை மீறிய நடவடிக்கை என்றும் பாகிஸ்தான் கூறுவது போல் ஜனவரி 6ஆம் தேதி இந்திய இராணுவம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விக்ரம் சிங் கூறினார்.
பாகிஸ்தானின் தாக்குதல் முன்கூட்டியே திட்டமிட்ட செயல் என்று கூறிய விக்ரம் சிங், பாகிஸ்தான் அத்துமீறல் மன்னிக்க முடியாதது என்றார்.
பொய்யான தகவல்களை பாகிஸ்தான் திட்டமிட்டு பரப்பி வருகிறது என்று குற்றம்சாற்றிய விக்ரம் சிங், இன்று நடக்கும் கூட்டத்தில் இந்தியா தனது கண்டனத்தை பாகிஸ்தானிடம் பதிவு செய்யும் என்றார்.


No comments:
Post a Comment