Tuesday, January 15, 2013
இலங்கை::மூன்று மாதங்களுக்குள் நாட்டுக்கு தேவையான புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை தயாரித்து அதனை ஜனாதிபதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் மிட்டியாகொட குணரத்தன தேரர் நேற்று கண்டியில் தெரிவித்துள்ளார்.
தேசிய பிக்கு முன்னணியின் தேரர்கள் நேற்று மல்வத்து மற்றும் அஸ்கரிய மாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே குணரத்தன தேரர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் அமைப்புச் சட்டம் காரணமாக சர்வாதிகாரிகள் உருவாகுவார்கள் எனவும் நாட்டு மக்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்படுபவர்கள் சர்வாதிகாரிகளாக மாறுவதை தடுக்க சிறந்த வழி புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த சாசனத்தையும், நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பு பௌத்த பிக்குகளுக்கு இருப்பதால், தாம் இந்த நடவடிக்கையை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் பௌத்த மதத்தை பயன்படுத்தி ஆட்சிக்கும் சிலர் தொடர்ந்தும் அந்த பொய்யை செய்ய இடமளிக்க போவதில்லை எனவும் இதனால் தேசிய பிக்குகள் முன்னணி உருவாக்க போகும் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து முதலில் மாநாயக்க தேரர்களுக்கு தெளிவுப்படுத்தியமாகவும் மிட்டியாகொட குணரத்தன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment