Monday, January 14, 2013

அரசியல் அமைப்பு தீர்திருத்தத்திற்கு அமைய புதிய பிரதம நீதியரசரை நியமிக்க விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் - பிரதி சபாநாயகர் ஷந்திம வீரகொடி!

Monday, January 14, 2013
இலங்கை::அரசியல் அமைப்பு தீர்திருத்தத்திற்கு அமைய புதிய பிரதம நீதியரசரை நியமிக்க விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதி சபாநாயகர் ஷந்திம வீரகொடி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பிரதம நீதியரசர் பதவிக்கு நியமிக்க கூடியவர்கள் என்ற கருதப்படுபவர்களது பெயர் ஜனாதிபதியினால் சபாநாயகருக்கு அனுப்பும் பட்சத்தில், சபாநாயகரினால் அது நாடாளுமன்றத்தில் அனுமதி பெறப்படும்.

நாடாளுமன்ற அனுமதி பெற்றவுடன் அது மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு புதிய பிரதம நீதியரசர், ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார் என்றும் ஷந்திம வீரகொடி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நாடாளுமன்ற அமர்வுகள் இன்று கூடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ எச் எம் அஸ்வர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

No comments:

Post a Comment