Monday, January 14, 2013

நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே ரிசானாவிற்கு தண்டனை விதிக்கப்பட்டது – சவூதி அரேபியா!

Monday, January 14, 2013
நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவான வகையிலேயே இலங்கை பெண் ரிசானா நாபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது. கடவுச் சீட்டில் ரிசானாவின் வயது 21 என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், சவூதி அரேபியா குறைந்த வயதுடையவர்களை கடமையில் அமர்த்துவதில்லை எனவும் அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ரிசானாவிற்கு தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறித்து உலக நாடுகள் பல கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ரிசானாவிற்கு தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறித்து பிழையான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரிசானா கொலை செய்த சிசுவின் பெற்றோருடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி மரண தண்டனையை தடுக்க சவூதி அரேபிய அதிகாரிகள் முயற்சி செய்த போதிலும் அந்த முயற்சி தோல்வியடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபிய மக்கள் மற்றும் சவூதியில் வாழ்வோரின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய வகையில் சட்டஙகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment