Monday, January 14, 2013

எல்லையில் பதற்றம் தணிக்க இந்தியா - பாக்., ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை:-இந்தியாவுக்குள் ஊடுருவ 2,500 பயங்கரவாதிகள் தயார்: பாகிஸ்தானில் பயிற்சி பெற்று எல்லையில் காத்திருப்பு!

Monday, January 14, 2013
புதுடில்லி::இந்திய பகுதிக்குள் ஊடுருவ, எல்லையை ஒட்டிய, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பயங்கரவாதிகள், 2,500 பேர் காத்திருக்கின்றனர்.

காஷ்மீர் மாநிலத்தில், கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே, கடந்த வாரம், இந்தியப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாக்., ராணுவத்தினர், இந்திய ராண
ுவ வீரர்கள் இருவரை சுட்டுக் கொன்றதோடு, காட்டுமிராண்டி தனமாக, அவர்களின் தலையையும் துண்டித்துச் சென்றனர். அவர்களில், ஒரு வீரரின் தலையை எடுத்தும் சென்றனர். இந்த சம்பவம், ராணுவம் மற்றும் மத்திய அரசு வட்டாரத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாக்., ராணுவத்தினரின் இந்த கொடூர நடவடிக்கைக்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதன் பின்னும், இந்திய வீரர்கள் மீது, தொடர்ந்து பீரங்கிகளாலும், ராக்கெட்டுகளாலும், பாக்., ராணுவத்தினர், தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்தியாவை பாக்., சீண்டும் போதெல்லாம், அதைப் பயன்படுத்தி, பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ பெரும் முயற்சி எடுப்பர். தற்போது, எல்லையில்

பதற்றமான சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், பாக்., ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் இருந்து, 2,500 பயங்கரவாதிகள், இந்திய பகுதிக்குள் ஊடுருவ காத்திருக்கின்றனர் என, புலனாய்வு நிறுவனங்கள்எச்சரித்து உள்ளன.

பாக்., பகுதியில், பயங்கரவாதிகளின் முகாம்கள், மொத்தம், 42 செயல்படுகின்றன. இதில், 25 முகாம்கள், இந்திய எல்லையை ஒட்டிய, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், 17 முகாம்கள் பாகிஸ்தானின் பிற பகுதிகளில் செயல்படுகின்றன. இந்த முகாம்களில் இருந்துதான், 2,500 பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று, ஆயுதம் மற்றும் வெடிமருந்துகளுடன், இந்தியாவுக்குள் எப்போது ஊடுருவலம் என, காத்து கிடக்கின்றனர். கடந்த, 2011ம் ஆண்டு, இந்தியாவுக்குள் ஊடுவிய பயங்கரவாதிகள் எண்ணிக்கை, 63 ஆக இருந்தது. ஆனால், 2012ம் ஆண்டு, இந்த எண்ணிக்கை, 90 ஆக உயர்ந்தது. ஊடுருவ முயன்ற, 125 பயங்கவராதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதையடுத்து, உஷார் அடைந்த மத்திய உள்துறை அமைச்சகம், எல்லையில்பாதுகாப்பை முடுக்கி விட்டுள்ளது. இது போல் ஊடுருவல் முயற்சிகள்

நடக்கும் போதெல்லாம், பாக்., ராணுவம் பெரும் உதவி புரிந்துள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவலில் ஈடுபடும் போது, அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போல், இந்திய நிலைகளை நோக்கி, பாக்., படைகள் ராக்கெட் தாக்குதலை நடத்தும்.
தற்போது, எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஊடுருவல் செய்ய பயங்கரவாதிகள் காத்திருப்பதாக, புலனாய்வுத் துறை எச்சரிக்கை செய்துள்ளதால், ராணுவம் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.


எல்லையில் பதற்றம் தணிக்க இந்தியா - பாக்., ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை!

புதுடில்லி::இந்தியா - பாக்., எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த, இந்திய ராணுவத்தின் கோரிக்கையை, பாக்., ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து, இரு நாட்டு, ராணுவ உயரதிகாரிகளின் கூட்டம், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இன்று நடக்கிறது.


ஜம்மு - காஷ்மீரில் உள்ள எல்லைப் பகுதியில், கடந்த வாரம் அத்துமீறி நுழைந்த, பாக்., ராணுவ வீரர்கள், இந்திய ராணுவ வீரர்கள் இருவரை, கொடூரமாகக் கொன்றதை அடுத்து, எல்லையில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது.இதையடுத்து, பாக்., ராணுவம், எல்லைப் பகுதியில், படைகளை குவித்தது. பதிலுக்கு, இந்திய ராணுவத்தின் நடமாட்டமும், எல்லைப் பகுதியில் அதிகரிக்கப்பட்டது. இந்திய ராணுவ வீரர்கள், தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்திய விமானப் படை தளபதி, பிரவுன், "போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை, பாக்., தொடர்ந்து மீறினால், வேறு வாய்ப்புகளை செயல்படுத்துவது குறித்து, பரிசீலிக்க வேண்டியிருக்கும்' என, எச்சரிக்கை விடுத்தார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே, போர் மூளும் சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையே, எல்லைப் பகுதியில் பதற்றத்தை தணிப்பதற்கான முயற்சியில், இரு நாட்டு அரசுகளும் ஈடுபட்டன. "இரு நாட்டு ராணுவத்தில் உள்ள, பிரிகேடியர் மட்டத்திலான அதிகாரிகளுக்கு இடையே, பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைக்கு சுமுக தீர்வு காணலாம்' என, இந்திய ராணுவம் சார்பில், பாகிஸ்தானுக்கு, நேற்று முன்தினம் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கு எந்த பதிலும் தெரிவிக்காமல், மவுனம் காத்த பாக்., ராணுவம், நேற்று, பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தது. இதன்படி, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம், காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில் இன்று நடக்கிறது.இதில், எல்லைப் பிரச்னை, இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம், போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகள் ஆகியவை குறித்து பேசப்பட உள்ளது.

பயங்கரவாதிகள் ஊடுருவல்:

இதற்கிடையே, பூஞ்ச் மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், சந்தேகத்திற்கிடமான சிலர், நேற்று ஊடுருவ முயற்சித்தனர். இதையறிந்த, இந்திய வீரர்கள், சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டும், ராக்கெட்டுகளை ஏவியும், அவர்களை விரட்டி அடித்தனர்.

இது குறித்து, இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர், ஆர்.கே.பாட்டியா கூறுகையில், ""இரு தரப்புக்கும் இடையே, அரை மணி நேரத்துக்கும் மேலாக, துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறுதியில், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்தவர்கள், விரட்டி அடிக்கப்பட்டனர். இவர்கள், பயங்கரவாதிகளாக இருக்கலாம்,'' என்றார்.

No comments:

Post a Comment