Saturday, January 12, 2013
இலங்கை::வெளிநாடுகளுக்கு எமது பெண்களை வேலைக்கு அனுப்பு வதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. எதிர்காலத்தில் இதனை மேலும் வலுப்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ரிசானா நபீக்கின் நிலைபற்றி குறிப்பிடும் போது போலி சான்றிதழ் பாஸ்போட் உட்பட போலி ஆவணங் களைத் தயாரித்து அவரை வெளிநாட்டுக்கு அனுப்பியவர்கள் அனைவரும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ரிசானாவிற்கு வழங்கப்பட்டுள்ள மரணதண்டனை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எனது வாழ்க்கையில் நான் கேள்விப்பட்ட வெறுக்கத்தக்க மிக மோசமான ஒரு சம்பவமாக தாம் இதைப் பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதால் பெண்கள் வெளிநாடு செல்வதை அரசாங்கம் படிப்படியாக கட்டுப்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில் இந்த நடவடிக்கை மேலும் வலுப்படுத்தப்படும்.
சம்பந்தப்பட்ட அமைச்சின் முன்னாள் அமைச்சராக நான் இருந்துள்ளேன். எனது பதவிக் காலத்திலேயே ரிசானா வெளிநாடு சென்றுள்ளார் என்ற வகையில் என்னால் ஒன்றை மட்டும் கூற முடியும். அரசாங்கமும் ஜனாதிபதியும் தம்மாலான மேற்கொள்ளக்கூடிய உச்சக்கட்ட பிரயத்தனத்தை ரிசானாவின் விடுதலை தொடர்பில் மேற்கொண்டுள்ளதை குறிப்பிட வேண்டும்.

No comments:
Post a Comment