Saturday, January 12, 2013

பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல் : எதையும் சந்திக்க தயார் ஏகே அந்தோணி பேட்டி!

Saturday, January 12, 2013
புதுடெல்லி::காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதை தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவுகிறது. எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயார் என்று ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. அதை மீறி இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே கடந்த செவ்வாய்க் கிழமை பாகிஸ்தான் படையினர் இந்திய பகுதிக்குள் ஊடுருவினர். பாதுகாப்பு பணியில் இருந்த 2 இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றனர். அவர்கள் தலையையும் துண்டித்தனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், காஷ்மீர் எல்லையில் 2 இடங்களில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது. மென்டார் பகுதியில் நேற்றிரவு 5 மணி நேரம் துப்பாக்கி சூடு நடந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அத்துமீறல் காரணமாக எல்லை பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதுதொடர்பாக ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி இன்று கூறுகையில், ‘போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தானின் செயல்கள் கவலைக்குரியது. அத்துமீறல்களை ஒருபோதும் ஏற்க முடியாது. எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராக உள்ளோம். காஷ்மீரில் போதுமான படைகள் உள்ளன என்றார்.

No comments:

Post a Comment