Saturday, January 12, 2013

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 2013 எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பம்!

Saturday, January 12, 2013
இலங்கை::யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 2013 இந்துக்களின் தைப்பொங்களைத் தொடரந்து எதிர்வரும் 18 ஆம் திகதி நடை பெறவுள்ளது. இவ் வர்த்தக சந்தையானது நான்காவது தடவையும் வெற்றிகரமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இவ் வர்த்தக கண்காட்ச்சியில் பலதரப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்திகள் சந்தைப் படுத்தப்படவுள்ளதுடன் இம்முறை 50,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் வருகைதரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment