Sunday, January 13, 2013
இலங்கை::மீண்டும் செஞ்சோலை சிறுவர் இல்லம் திறக்கப்படவுள்ளது. செஞ்சோலை பிரபாகரனால் தற்கொலை படைக்கு குழந்தைகளை வளர்க்க உருவாக்கப்பட்ட சிறுவர் இல்லம். பிரபாரகரனின் நேரடி வழிப்படுத்தலுடன் இந்த இல்லம் இயங்கிவந்தது. அத்துடன் செஞ்சோலை சிறார்களுடன் பிரபாகரன் மிகவும் நெருக்கமாக பழகி வந்ருந்தனர் எனக் சுறப்பட்டது.
கிளிநொச்சியில் இரணைமடுவில் உள்ள புலிகளின் செஞ்சோலை சிறுவர் இல்லம் அமைந்திருத்த இடத்தில் தற்பொழுது அதே பெயருடனும் அதே பெயர்ப்பலகையுடனும் செஞ்சோலை சிறார் இல்லாம் மீண்டும் திறக்கப்படுகிறது.
இந்த இல்லத்தை இப்பொழுது புலிகளின் முன்னாள் வெளியுறவுப் பொறுப்பாளர் கே.பி எனப்படும் குமரன் பத்தநாதன் திறக்கின்றார். செங்சோலை சிறார் இல்லத்துடன் புலிகளால் நடத்தப்பட்ட மேலும் இரண்டு இல்லங்களுக்கு பொறுப்பாக கே.பியை அமர்த்தியுள்ளது.
இந்நிலையில் செஞ்சோலை சிறார் இல்லம் மீண்டும் அதே பெயரில் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment