Sunday, January 13, 2013
இலங்கை::தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு புனர்வாழ்வு முகாம்களில் பயிற்சிகளை நிறைவு செய்த முன்னாள் புலிபோராளிகள் 313 பேர் இன்று சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர்.
வவுனியா, மருதமடு, பூந்தோட்டம் மற்றும் வெலிகந்த சேனபுர ஆகிய புனர்வாழ்வு முகாம்களில் பயிற்சிகளை நிறைவுசெய்தவர்களே இன்று பெற்றோர் அல்லது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர்.
அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று காலை 9 மணியளவில் இதற்கான வைபவம் நடைபெற்றுள்ளது.
இவர்களைத் தவிர, புனர்வாழ்வு நிலையங்களில் மேலும் 424 பேர் மாத்திரமே எஞ்சியிருப்பதாகவும் அவர்களும் பயிற்சிகளின் பின்னர் சமூகமயப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சின் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு சிரேஷ்ட ஆலோசகர் S.சதீஸ்குமார் கூறினார்.

No comments:
Post a Comment