Sunday, January 13, 2013

கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சின் வாகனங்களுக்கு தீ வைப்பு!

Sunday, January 13, 2013
இலங்கை::மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சின் இரண்டு வாகனங்கள் இனந்தெரியாத குழுவொன்றினால் தீயிட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சினால் பயன்படுத்தப்பட்டு வந்த கெப் வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியன இன்று அதிகாலை 2 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

தீயினால் கெப் வாகனத்திற்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டி முழுமையாக எரிந்துள்ளது.

குறித்த வாகனங்களுக்கு தீ வைத்ததன் பின்னர் சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment