Friday, January 11, 2013

புலிகள் அமைப்புக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த தடை நீட்டிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது!

Friday, January 11, 2013
சென்னை::புலிகள் அமைப்புக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த தடை நீட்டிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி புலிகளினால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1991-ம் ஆண்டு  புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்படுகிறது. கடைசியாக 14-5-2012-ல்  புலிகள் மீதான தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.

இந்தத் தடை நீட்டிப்பு சரியானதா இல்லையா என்பது குறித்து நீதிபதி வி.கே. ஜெயின் தலைமையிலான சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.

இந்தநிலையில் புலிகள் மீதான தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையை நீதிபதி எம்.கே. ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991ஆம் ஆண்டு புலிகளினால் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீடிக்கப்பட்டு வருகிறது.


இந்தத் தீர்ப்பாயத்தின் விசாரணைகள் சென்னை, ஊட்டி, புதுடெல்லி போன்ற பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதன்போது, மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் (புலி) வைகோ உள்ளிட்டோர்  புலிகள் மீதான தடை நீடிப்புக்கு எதிராக தீர்ப்பாயத்தின் முன் தோன்றி வாதிட்டனர்.

இதனையடுத்து,  புலிகள் மீதான தடையை நீடித்து மத்திய உள்விவகார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு சரியானதே என்று நீதிபதி எம்.கே.ஜெய் தலைமையிலான தீர்ப்பாயம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்த அறிவிப்பு தமிழக அரசின் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment