Friday, January 11, 2013
இலங்கை::புலி ஆதரவாளர்களுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர சதித் திட்டம் தீட்டி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அரசாங்கத்திற்குச் சொந்தமான divaina பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
தற்போது பிரிட்டனில் தங்கியிருக்கும் மங்கள சமரவீர, புலி ஆதரவாளர்களை இரகசியமாக சந்தித்து வருகின்றார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை சீர்குலைக்க புலி ஆதரவு அமைப்புக்கள் முயற்சிக்கின்றன.
பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளிடம் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என புலி ஆதரவாளர்கள் கோரி வருகின்றனர்.
உலகத் தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரனுடன் மங்கள சமரவீர இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் சில புலம்பெயர் செய்தி இணையங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக divaina பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment