Friday, January 11, 2013

இலங்கை பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக - அவுஸ்திரேலியா அறிவிப்பு!

Friday, January 11, 2013
இலங்கை::எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, உறுதி செய்திருந்தார் என உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை மனித உரிமை விவகாரங்கள் குறித்து இலங்கையுடன் கனடா பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வுகளை எட்ட முடியும் என அவுஸ்திரேலியா பரிந்துரை செய்துள்ளது. நல்லிணக்க முனைப்புக்கள், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை அடிப்படையாக அமையும் என தெரிவித்துள்ளது.

இதேவேளை, மனித உரிமை நிலைமைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படாவிட்டால் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் பங்கேற்க மாட்டார் என அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த கனேடிய குடியுரிமை அமைச்சர் ஜேசன் கெனி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment