Friday, January 11, 2013

சவூதிக்கான இலங்கை தூதுவர் மீள் அழைப்பு ? மறுத்துள்ளார் தூதுவர்!

Friday, January 11, 2013
இலங்கை::சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் அஹமட் ஜவாத்தை இலங்கை உடனடியாக மீள அழைத்துள்ளதாக இலங்கை வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை தூதுரகம் தூதுவர் இன்றி சவூதியில் தொடர்ந்து இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று ஆங்கில செய்திகள் தெரிவிக்கிறது ரிசானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சவுதியில் உள்ள இலங்கை தூதுவரை இலங்கை உடன் மீளழைத்துள்ளது. என்று ஆங்கில செய்திகள் தெரிவிக்கிறது.

ஆனால் ரிசான நபீக்குக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து சவுதிக்கான இலங்கைத் தூதர் திரும்ப அழைக்கப்படுவதாக வந்த செய்திகளை அஹமட் ஜவாத் மறுத்துள்ளார். தனது மூன்று ஆண்டுகால பதவிக் காலம் டிசம்பர் 9 ஆம் திகதி முடிந்து விட்டதால் இது வழக்கமான ஒரு மாற்றல் எனவும் கூறுகியுள்ளார்.

No comments:

Post a Comment