Friday, January 11, 2013

பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி?: விஜயகாந்த் பேட்டி!

Friday, January 11, 2013
ஸ்ரீவில்லிபுத்தூர்::ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று அதிகாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார். அவருடன் மனைவி பிரேமலதா, மாமியார் அம்சவேணி மற்றும் உறவினர்களும் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பாண்டியராஜன், ஏ.கே.டி.ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணிக்காக நாச்சியார் டிரஸ்ட் அமைக்கப்பட்டு நன்கொடைகள் மூலம் தங்கம் வாங்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு 10 பவுன் தங்கத்தை விஜயகாந்த் வழங்கினார். பின்னர் விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்பட்டாலும் தமிழகத்திற்கு போதுமான அளவு மின்சாரம் கிடைக்காது. வறட்சி காலத்தில் இன்னும் அதிக கஷ்டம்தான் ஏற்படும். பாராளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு இப்போது என்ன அவசரம் உள்ளது. நேரம் வரும்போது முடிவு செய்வோம். மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசினால் அவதூறு வழக்கு போடுகிறார்கள். என் மீது போடப்படும் வழக்குகளை பத்திரிகைகளை பார்த்தே தெரிந்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment