Friday, January 11, 2013

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்குமான விசேட கூட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது!

Friday, January 11, 2013
இலங்கை::ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்குமான விசேட கூட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள, சிறிலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளன.

அத்துடன் கடந்த தேர்தல்களில் வினைத்திறனாக செயற்படாத தொகுதி அமைப்பாளர்கள் தொடர்பிலும் இதன் போது விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி ஒன்றை வழங்குவது தொடர்பான கொள்கையின் அடிப்படையில், இன்றைய கூட்டத்தின் பின்னர், புதிய தொகுதி அமைப்பாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment