Friday, January 11, 2013

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயகவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது!

Friday, January 11, 2013
இலங்கை::பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயகவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

நேற்றைய தினம் இது தொடர்பான பிரேரணையை அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்றையதினம் இரண்டாவது நாளாக விவாதம் இடம்பெற்று, மாலை 6.30 அளவில் இந்த பிரேரணை வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

No comments:

Post a Comment